நல்லாசிரியர் விருதுக்கு 7 பேர் தேர்வு

நல்லாசிரியர் விருதுக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நல்லாசிரியர் விருதுக்கு 7 பேர் தேர்வு
Published on

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 7 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செல்வசிகாமணி, வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், எசனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், அயன்பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராசன், சிறுவாச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை தவமணி, பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் விநாயகமூர்த்தி, திருவாலந்துறை புனித மேரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரவிணா ஆகிய 7 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருகிற 5-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து விருது வழங்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com