7 பைபர் படகின் என்ஜின்கள் ஆற்றில் வீச்சு - நாகூரில் பரபரப்பு

நாகூர அருகே 7 பைபர் படகின் என்ஜின்களை மர்ம நபர்கள் ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 பைபர் படகின் என்ஜின்கள் ஆற்றில் வீச்சு - நாகூரில் பரபரப்பு
Published on

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை விற்பனை மற்றும் ஏலம் விடுவதில் இரண்டு தரப்பும் மீனவர்கள் மத்தியில் பிரச்சனை இருந்து வருகிறது.

மேலபட்டினச்சேரி பகுதியை சேர்ந்த மீனவர்களை நேரடியாக மீன் விற்பனை செய்வதற்கு அனுமதிக்காத கீழ பட்டினச்சேரியை சேர்ந்த கிராம நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 15-ந் தேதி நாகூர்-காரைக்கால் ரோட்டில் மீன்களை கொட்டி சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலபட்டினச்சேரி பகுதி மீனவர்களின் 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்களை மர்ம நபர்கள் ஆற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து துறைமுகத்தில் திரண்ட ஏராளமான மேலபட்டினச்சேரி பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான என்ஜின்கள், வலைகளை நாசப்படுத்தியதால் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில் பாகுபாடு இல்லாமல் தங்களுக்கும் சம உரிமை வழங்கி மீன்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com