பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
Published on

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வன் என்பவரின் மனைவி மகாலட்சுமி(வயது 40). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில், மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது மாட்டு கொட்டகையில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர், மகாலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து மகாலட்சுமி கூச்சலிட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் அப்பகுதி வயல்களில் தேடியும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com