சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை ;

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை ;
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தவளைகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரின் மகன் வேலுச்சாமி (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சுபத்திரா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com