சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனா.

அப்போது தென்ஆப்ரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த இருவா மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவர்களிடம் உள்ள பொருட்களையும் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த சூட்கேசில் ரகசிய அறைகள் மூலம் போதை பொருளை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருளை கடத்தி வந்த 2 ஆப்பிரிக்க பெண்களையும் கைது செய்தனர்.

கடந்த மாதம் 6ஆம் தேதி ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com