மது விற்ற 70 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 70 பேர் கைது
Published on

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி கடந்த 8-ந் தேதி முதல் நேற்று வரை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 883 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com