70 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மூதாட்டி

70 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதிய கோவையை சேர்ந்த ராணி, தமிழில் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கோவை,
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டை விட அதிகமாக நடப்பாண்டில் 95.03 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவையை சேர்ந்தவர் ராணி (வயது 70). இவருடைய கணவர் உயிரிழந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த இவருக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படித்து, தேர்வில் கலந்து கொண்டார். இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வு முடிவு வெளியானதில் 346 மதிப்பெண்கள் பெற்று, அவர் தேர்ச்சி அடைந்து உள்ளார்.
தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் பெற்ற அவர், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.






