

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனேரி பகுதியில் 71 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்து கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் விஜய் (வயது 28), காளியப்பன் மகன் சமுத்திரராஜன்(63) மற்றும் ராஜ்குமார் மகன் மாரிக்கண்ணன்(25) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 71 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.