71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்

நாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார்.
71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்
Published on

சென்னை,

நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை சாலை போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

விழா மேடை அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குடியரசு தின விழா எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி, அமைதியாக நடைபெற்று வருகின்றன.

இதனை அடுத்து முப்படை மற்றும் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com