பெரம்பலூரில் கொரோனாவுக்கு 72 பேர் சிகிச்சை

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 72 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெரம்பலூரில் கொரோனாவுக்கு 72 பேர் சிகிச்சை
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவில் 6 பேரும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் தாலுகாக்களில் தலா 3 பேரும், வேப்பூர் தாலுகாவில் 2 பேரும் என மொத்தம் 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் ஆவர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 57 பேர் வீட்டு தனிமையிலும், 12 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com