72வது குடியரசு தின விழா; தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
72வது குடியரசு தின விழா; தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Published on

சென்னை,

நாட்டின் 72-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் விழாவில் ஆளுநா பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு மலா வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழாவின்போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீ விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படுகிறது.

முன்னதாக சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பொது மக்கள், பார்வையாளாகள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊாதிகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெற்றன. தற்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com