பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாள்: கொடி, இலச்சினை வெளியிட்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாள் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாள்: கொடி, இலச்சினை வெளியிட்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக 75-வது நிறுவன நாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புப் பெருந்திரளணியின் தலைவராக, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாள் கொடி, சிறப்புப் பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் (Bulletin), இலச்சினை (Logo) ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com