

சென்னை,
சென்னை வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் திண்டுக்கல் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது.
இதற்கான இழப்பீட்டு தொகையாக சென்னை கோட்ட அமலாக்க பிரிவின் மூலமாக ரூ.12 லட்சத்து 44 ஆயிரத்து 812 அத்துடன், ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்து 867 மற்றும் மதுரை, திருச்சியில் ரூ.29 லட்சத்து 28 ஆயிரத்து 826 உட்பட ரூ.98 லட்சத்து 39 ஆயிரத்து 594 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 500 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.