தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு - தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு - தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 பேர் பெண்கள். 237 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

பதிவு செய்துள்ளவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16,73,803 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள உள்ள கல்லூரி மாணவர்கள் 17,32,820 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 28,82,193 பேரும் உள்ளனர்.

அதுபோலவே 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13,24,170 பேரும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11,070 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1,40,523 என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com