வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 762 பேர் கைது

சேலத்தில் வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 762 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 762 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நேற்று குரங்குச்சாவடி பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

அந்த கூட்டத்தில் பேசிய எல்.முருகன், நாமெல்லாம் கடும் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபாடு நடத்திய முருகனை, கயவர் கூட்டம் கேவலமாக பேசியது. அதை யாரும்க ண்டிக்கவில்லை. பா.ஜ.க கண்டித்ததோடு

அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியே இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. டிச. 7ம் தேதி திருச்செந்துரில் இந்த யாத்திரை நிறைவடையும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.கதான் அதிக இடங்களைக் கைப்பற்றப் போகிறது என்று தெரிவித்தார்.

வெற்றிவேல் யாத்திரைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கட்சி கொடிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர்.

வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்பதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டம் முடிவடைந்ததும் வெற்றிவேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மொத்தம் 84 பெண்கள் உள்பட 762 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com