

சென்னை,
தமிழகத்தின் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், சென்னை கோவளத்தில் இன்று 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும், ரூ.58,214 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 65,786 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய மாநாட்டின்போது, முதல்-அமைச்சர் விஜய் ரூ.7,925 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில்துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மாநிலம் முழுவதும் 19,965 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.1,430 கோடி மதிப்பிலான, நிறைவடைந்த 6 திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 1,710 நபர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நிகழ்வின்போது, 5 நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நபர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.