தூத்துக்குடியில் 7.8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரர் கைது

ஆறுமுகநேரி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் ஆறுமுகநேரி, காணியாளர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் இன்று ஆறுமுகநேரி, காணியாளர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள சாமுவேல் மகன் ராஜதுரை (வயது 48) என்பவரது மளிகை கடையை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன போலீசார் ராஜதுரையை கைது செய்து அவரிடமிருந்த 7 கிலோ 875 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
Related Tags :
Next Story






