78 மின்திருட்டுகள் மற்றும் 30 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு - மின்சார வாரியம் நடவடிக்கை

அதிகாரிகளால் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.96.70 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
78 மின்திருட்டுகள் மற்றும் 30 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு - மின்சார வாரியம் நடவடிக்கை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

16.12.2025 முதல் 31.12.2025 வரை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கோவை, மதுரை, திருச்சி ஆகிய அமலாக்க கோட்டங்களுக்குட்பட்ட மேட்டூர், திருப்பூர், கோபி, பல்லடம், ஈரோடு, நாமக்கல், மதுரை, தஞ்சாவூர், திருப்பத்தூர், கள்ளளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மின் பகிர்மான வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் கோவை, கோவை வடக்கு, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய உபகோட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் அதிரடி கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 78 மின்திருட்டுகள் மற்றும் 30 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு. இழப்பீட்டு தொகையாக ரூ.96,70,254/- (ரூபாய்தொண்ணூற்று ஆறுலட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு மட்டும்) மின்நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.5,01,000/-(ரூபாய்ஐந்துலட்சத்துஒருஆயிரம்மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591, கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456, மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443037508, திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443329851 என்ற எண்ணில்தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com