

கல்பாக்கம்,
7-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்கா ரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாலிடெக் னிக் மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப் பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்யில் உள்ள காரைத்திட்டு கிரா மத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 20). இவரது நண்பர் அஜய் (27). இவர்கள் 14 வயதான 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி அவரது வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, அங்கு இருவரும் மாறி, மாறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போராடிய அந்த சிறுமியை இருவரும் தலையில் ஒரு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை மகளை தேடி சென்றார்.
அந்த வழியாக சென்றவர்கள் உங்கள் மகள் இந்த வழியாகத்தான் சென்றார் என்று சொன்ன தகவலின் பேரில் சந்தேகமடைந்து ஒரு மொட்டை மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அந்த சிறுமி அலங்கோலமாக மயக்க நிலையில் கிடந்ததை கண்டு பதறிய அவரது தந்தை தன்னுடைய மகளை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
இது குறித்து அவர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைத்திட்டு பகுதியில் ஒரு இடத் தல் பதுங்கி கிடந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன், அஜய் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அஜய் மரக்காணத்தில் உள்ள இறால் பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறார்.