7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தாயின் கள்ளக்காதலன் சென்னையில் கைது

தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுமியிடம் அஜித்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
கைது
Published on: 

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து 7-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் வசித்து வருகிறார். அந்த பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருடன் பணியாற்றிய கோவை குறிச்சிரோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

பாலியல் தொல்லை

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் வேலையை விட்டு விட்டு கடந்த 3 ஆண்டுகளாக அருமனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களுடன் பெண்ணின் மகளும் இருந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் திடீரென மாயமானார். மேலும் சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் மகளிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுமியிடம் அஜித்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் அஜித்குமார் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.

X