7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்ய தடை

ராமேசுவரம் பகுதியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடற்கரையில் வருகிற 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தர்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்ய தடை
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின், சுகாதார அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பாலன், நிஜாமுதீன் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் சங்க தலைவர் சந்திரன், பாலா, அயோத்தி உள்பட உறுப்பினர்களும், துறைமுக வீதி வர்த்தக சங்க தலைவர் ராஜாமணி, நாகேந்திரன் மற்றும் உறுப்பினர்களும், புரோகிதர்கள் சங்க பொறுப்பாளர்கள் ரமணி, கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராமேசுவரம் பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தாசில்தார் மார்ட்டின் கூறுகையில், வருகிற 7-ந் தேதி முதல் 9-ந் தேதி மாலை வரை அக்னிதீர்த்த கடற்கரையில் எவ்வித தர்ப்பண பூஜையும் செய்யக்கூடாது. மேலும் 12-ந் தேதி ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்றைய தினமும் அக்னித்தீர்த்த கடற்கரையில் தர்ப்பண பூஜைக்கு அனுமதி கிடையாது.

அதேபோல 7, 8, 9, 12-ந் தேதிகளில் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறை வழங்கக்கூடாது என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை மீறி லாட்ஜ்களில் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொருட்கள் வழங்க வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அனைத்து சங்கத்தினரும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com