சட்ட விரோதமாக சிதம்பரத்தில் வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது


சட்ட விரோதமாக சிதம்பரத்தில் வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2025 11:17 AM IST (Updated: 3 April 2025 1:13 PM IST)
t-max-icont-min-icon

அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உரிய பின்னணியை ஆராயாமல் வேலை அளிக்கக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.

கடலூர்

கடலூர் மாவட்ட போலீசாருக்கு சட்ட விரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சிதம்பரம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்ததாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சிதம்பரத்திற்கு விரைந்த போலீசார், அங்கு தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உரிய பின்னணியை ஆராயாமல் வேலை அளிக்கக் கூடாது என கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

1 More update

Next Story