சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் 8 கார்கள் சேதம்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று பலமாக வீசியதுடன் கனமழையும் பெய்தது.
கார்
Published on: 

சென்னை,

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் 8 கார்கள் சேதம் அடைந்தன.

கனமழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவான 2-வது புயலான முரசு, ஆந்திராவில் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்தப் புயல் சென்னையை ஒட்டி கடலில் கடந்தபோது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று பலமாக வீசியதுடன் கனமழையும் பெய்தது.

இதனால், இரு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 50 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்தது.

இதில், அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள் சேதம் அடைந்தன. இதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மரங்களை வெட்டி அகற்றினர். அதனால், இன்று காலை மின்வாரிய தலைமை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

X