இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 8 மீனவர்கள் சென்னை திரும்பினர்

படகு ஓட்டுநர் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான
8 மீனவர்கள் சென்னை திரும்பினர்
Published on: 

மீனம்பாக்கம்,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

விடுதலை

பின்னர், 9 பேரையும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், படகு ஓட்டுநர் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 8 மீனவர்களையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, விடுதலையான 8 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள் 8 மீனவர்களுக்கும் அவசரகால பயண ஆவணங்களை வழங்கி, விமானம் மூலம் சென்னை அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த 8 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், வாகனம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

X