நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன

விக்கிரவாண்டியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.
நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன். இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகளை விக்கிரவாண்டி கீழக்கொந்தை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டின் அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்தார். ராமச்சந்திரன் தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, இரவில் பண்ணையில் அடைத்து விடுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல் ஆடுகளை பண்ணையில் அடைத்து விட்டு ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்துக்கிடந்தன.  நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கதறிக்கடித்ததால் செத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதாவது காரணமா இருக்குமா என்று சுகாதாரத்துறையினர் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com