8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

ஆவுடையார்கோவில் கடை வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகன் குமார் (வயது 28). இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு சென்று கடையில் வைத்திருந்த 8 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிமளம் பேரூராட்சி பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் (32) மற்றும் ஏம்பல் ரோடு பள்ளிவாசல் அருகே கடை நடத்தி வருபவர் முகமது அலி ஜின்னா (40). இவர்கள் கடைகளில் அரிமளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com