

சென்னை,
சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8% லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங் கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங் கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான வணிக சேவை நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2% ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அர சுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால், வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணிய மர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக் கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் நாளை (இன்று) வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.