தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாகிறதா..? சட்டப்பேரவையில் அமைச்சர் புதிய தகவல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாகிறதா..? சட்டப்பேரவையில் அமைச்சர் புதிய தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார். ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கக் கோரியதற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com