கஜா புயலால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு

கஜா புயலால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கஜா புயலால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு
Published on

தஞ்சை,

கஜா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும், குறிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com