பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

வேடசந்தூர் அருகே, பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
Published on

வேடசந்தூர் அருகே உள்ள கூவக்காபட்டி சிவன்கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கூம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், வேடசந்தூரை சேர்ந்த தன்ராஜ், டீயாலோ, சிவா, கிருஷ்ணராஜ், சின்னத்துரை, அழகாபுரியை சேர்ந்த பரமன், காசிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், கூவக்காப்பட்டியை சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1,300 மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com