புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் சிக்கினர்

நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் சிக்கினர்.
புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் சிக்கினர்
Published on

நெல்லை மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை போலீஸ் நிலைய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்த சோதனையில் புகையிலை விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 132 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com