இளம்பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

மர்ம நபர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.
இளம்பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி ஜெயப்பிரியா (வயது 28). இவர் நேற்று முன்தினம் தனது தாயார் வள்ளியுடன் (42) உளுந்தூர்பேட்டை தாலுகா கெடிலம் பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து தாயும், மகளும் தங்களது ஸ்கூட்டரில் மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இரவு 8 மணி அளவில் பு.கிள்ளனூர் கிராம சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென ஜெயப்பிரியாவின் ஸ்கூட்டரை வழிமறித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஜெயப்பிரியா மற்றும் அவரது தாயாரை மிரட்டியுள்ளனர். பின்னர் ஜெயப்பிரியாவின் கழுத்தில் 8 பவுன் நகையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரியா திருடன்... திருடன்... எனக் கூச்சலிட்டுள் ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஜெயப்பிரியா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. மோட்டார் சைக்கிளில் வந்து கத்திமுனையில் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பறிபோன நகையின் மதிப்பு ரூ.8 லட் சமாகும். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

==============

X

Daily Thanthi
www.dailythanthi.com