கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்

கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணித்து உள்ளனர் என என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த செப்டம்பர் மாதம் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்து உள்ளனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 15-ந் தேதி 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பேர் பயணித்தனர். கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி 32 லட்சத்து 54 ஆயிரத்து 175 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 43 லட்சத்து 63 ஆயிரத்து 739 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 2 லட்சத்து 78 ஆயிரத்து 579 பேரும், குழு பயணச்சீட்டை பயன்படுத்தி 6 ஆயிரத்து 986 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 5 லட்சத்து 43 ஆயிரத்து 703 பயணிகளும் பயணித்து உள்ளனர்.

கியூ ஆர். குறியீடு மற்றும் வாட்ஸ் அப் டிக்கெட் மற்றும் பேட்டிஎம் ஆப் உள்ளிட்டவற்றுக்கு 20 சதவீதம் கட்டண் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பயணிகள் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் எண் 83000-86000 இதனை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com