பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்தநாள் விழா - உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினார்.
பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்தநாள் விழா - உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
Published on

திருச்செந்தூர்,

பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரவிக்கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள், தென் மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பெரும் உதவிகளை செய்தவர். அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் பெரும் பங்காற்றினார்.

பத்திரிகை உலகின் பிதாமகனான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இந்த விழாவை நாள் முழுவதும் முழு விழாவாக திமுக சார்பில் நடத்தப்படும். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களது வழியில் என்றும் தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம் என்று அவர் கூறினார்.

இதனையடுத்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com