மார்த்தாண்டம் அருகே 86 வயது முதியவர் பாமாயில் ஊற்றி எரித்துக் கொலை

தலவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஆல்பர்ட் ஆஸ்பினை கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே 86 வயது முதியவர் பாமாயில் ஊற்றி எரித்துக் கொலை.
ஆல்பர்ட் ஆஸ்பின் - குழந்தைவேல்
Published on: 

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியில், 86 வயது முதியவர் ஒருவர் பாமாயில் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

சொத்து காரணமாக முன்விரோதம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 86). இவரது மகன் ஜெபமணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் ஆஸ்பின் என்பவருக்கும் இடையே சொத்து காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மதுபோதையில் ரகளை

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஜெபமணி வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை ஆல்பர்ட் ஆஸ்பின் அடித்து நொறுக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதனால் அன்று இரவு ஜெபமணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். இதையடுத்து மதுபோதையில் இருந்த ஆஸ்பின் ஜெபமணீயின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

பாமாயில் ஊற்றி எரித்துக் கொலை

ஜெபமணியின் தந்தை குழந்தைவேல் வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது போதை தலைக்கேறிய ஆஸ்பின் வீட்டிலிருந்த துணிகளைப் போட்டு, முதியவர் குழந்தைவேல் மீது பாமாயில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

தலவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஆல்பர்ட் ஆஸ்பினை கைது செய்தனர். இதையடுத்து போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X