மதுபாரில் 862 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுபாரில் 862 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபாரில் 862 மது பாட்டில்கள் பறிமுதல்
Published on

விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக்கடை அருகே உள்ள மதுபாரில் எவ்வித அனுமதி உரிமம் இன்றி அரசு தடை செய்த நேரத்தில் மதுபாட்டில் விற்பனை செய்ததாக விற்பனையாளர் விருதுநகர் பிச்சை தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது23), மேலாளர் சிவசக்தி முருகன், பொறுப்பாளர் நவீன் குமார் ஆகிய 3 பேர் மீதும் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மதுபாரில் இருந்த ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 100 மதிப்புள்ள 862 மது பாட்டில்களும், ரூ.480-யையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com