திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கூட்ட நெரிசல்

கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கூட்ட நெரிசல்
Published on

மதுரை,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடியுள்ளனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இதுவே முதல் படைவீடு என்பது சிறப்புக்குரியதாகும். கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் விசாக திருவிழாவையொட்டி ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நடை திறக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவின் போது, கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள், போதிய குடிநீர் வசதி இல்லாமை மற்றும் கடும் வெயில் காரணமாக பக்தர் ஒருவர் மயக்கமடைந்தார். மயக்கமடைந்த பக்தர் அங்குள்ள முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது பற்றி பக்தர்கள் கூறுகையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு உரிய வசதிகள் ஏதும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com