சென்னையில் ஒரே நாளில் 8,704 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் - ரூ.7.70 லட்சம் அபராதம் வசூல்!

இந்த சோதனை பரபரப்பாக காணப்படும் 22 சந்திப்புகள் உள்பட மொத்தம் 88 இடங்களில் நடைபெற்றது.
அபராதம் வசூல்
Published on: 

சென்னை,

போலீஸ் சென்னையில் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

'போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நாள்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டீஸ்வரி, இணை கமிஷனர் பகலவன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மேற்பார்வையிட்டு முடுக்கி விட்டனர். மொத்தம் 88 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்து 704 பதிவு வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.

சோதனை

விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடமிருந்து உடனடி அபராத தொகையாக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரையிலும் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பாக காணப்படும் 22 சந்திப்புகள் உள்பட மொத்தம் 88 இடங்களில் நடைபெற்றது.

இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்ற 5700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பர் பிளேட்டுகளை முறையாக பொருத்தாழ 620 பேர் மீதும், நோ எண்ட்ரியில் வாகனங்களை ஒட்டிய 680 பேர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளது.

வடக்கு மண்டலத்துக்குட்ப்பட்ட பகுதியில் 3 ஆயிரத்து 816 வழக்குகளும், தென் சென்னையில் 2 ஆயிரத்து 218 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 750 வழக்குகளும், மேற்கு மண்டயத்தில் 1920 வழக்குகளும் பதிவாகி உள்ளன. அபாாத தொகையை பொருத்தவரையில் அதிகமாக தென் சென்னையில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மேற்கு மண்டவத்தில் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 400. வடக்கு மண்டலத்தில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 700, கிழக்கு மண்டலத்தில் ரூ.60 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

X