தமிழகத்தில் 88 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 49 ஆண்கள், 39 பெண்கள் உள்பட மொத்தம் 88 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 88 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 49 ஆண்கள், 39 பெண்கள் உள்பட மொத்தம் 88 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் உள்பட 24 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அரியலூர், தென்காசி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 26 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com