

சென்னை,
தமிழகத்தில், லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த, 10 ஆண்டுகளில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 889 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார், மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை ரகசியமாக கண்காணித்தும், புகார்களின் அடிப்படையிலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திடீர் சோதனைகள் நடத்தி கணக்கில் வராத லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.
அந்த வகையில், கடந்த மாதம் மட்டும், ரூ.2.15 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில், 1.87 கோடி ரூபாயை, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 'கூகுள் பே' வாயிலாக பெற்றுள்ளனர். லஞ்ச வழக்குகளில், நீதிமன்றங்களில் தகுந்த ஆவணங்கள் மற்றும் சாட்சிகளுடன், போலீசார் குற்றத்தை நிரூபித்து, குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை பெற்று தருகின்றனர்.
நடப்பு ஆண்டில் இதுவரை, 73 பேருக்கும், கடந்த, 10 ஆண்டுகளில், அரசு ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் 889 பேருக்கம் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். லஞ்ச இதுகுறித்து, ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'அதிகபட்ச மாக, 2024 -2025 ஆண்டில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என, 126 பேருக்கு சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, 2020 - 2021-ல் 41 பேர், 2021 -2022ல், 51 பேருக்கு மட்டுமே சிறை தண்டனை பெற்றுத்தர முடிந்தது என்று கூறினர்.