மீஞ்சூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 8-ம் வகுப்பு மாணவர் பலி - தாய் கண் எதிரே பரிதாபம்

மீஞ்சூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தாய் கண் எதிரே 8-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
மீஞ்சூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 8-ம் வகுப்பு மாணவர் பலி - தாய் கண் எதிரே பரிதாபம்
Published on

மீஞ்சூர் என்.எஸ்.கே.நகர் ராஜாதோப்பு பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் பாலசூர்யா (வயது 12). இவர் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பாலசூர்யா தாய் சாந்திமணி (32)-யுடன் மணலியில் உள்ள உறவினர் வீட்டில் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வல்லூர் நான்கு வழி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாலசூரியா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் தாய் கண் எதிரே அவர் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த மீஞ்சூர் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பள்ளி மாணவர் பாலசூரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com