

கோவை,
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கோர்ட்டில் முதல் முறையாக நேரடியாக ஆஜரானார்கள். அவர்களை பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக சேலம் சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.