வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந்தேதி 9 குழந்தைகள் பிறந்தன

பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந்தேதி 9 குழந்தைகள் பிறந்தன
Published on

அடுக்கம்பாறை,

பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. இந்த கால் நாளை கணக்கிடாமல், ஆண்டுக்கு 365 நாட்கள் என்றே அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். எனவே, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே வருகிறது.மீதமுள்ள கால் நாட்களைச் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும்.இதுபோல, பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர்.அதன்படி, 2024 மற்றும் 2028 என்று அடுத்தடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் லீப் ஆண்டு வரும். எனவே, லீப் ஆண்டான நேற்று பிப்ரவரி 29-ந் தேதி பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்த நாள் கொண்டாட முடியும்.முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் லீப் ஆண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந் தேதியான நேற்று 7 ஆண், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 9 குழந்தைகள் பிறந்துள்ளன.இக்குழந்தைகள் 2028-ம் ஆண்டு தான் அடுத்த பிறந்த நாளைக் கொண்டாட முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com