முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின

முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின.
முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் உள்ள முட்புதரில் 3 வாலிபர்கள் வெடிகுண்டுகளை பதுக்கியுள்ளனர். இதை அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்ததால் 3 பேரும் ஓடிவிட்டனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்று முட்புதரில் கிடந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெப்பம் காரணமாக அந்த நாட்டு வெடிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய போலீசார், அவற்றை அங்குள்ள ஓடை பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்தனர். அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கயிறு கட்டி கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தப்பி ஓடிய 3 வாலிபர்களும் போலீசாரிடம் சிக்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com