சென்னையில் 9 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி

நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 9 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
Published on

சென்னை,

சென்னை உள்நாட்டு விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 9 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, புனே, கவுகாத்தி செல்ல இருந்த விமான சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com