சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு

விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
மின்சார வானங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் போதிய அளவில் இல்லாததால் , மக்கள் மின்சார கார்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்,
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்,
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்,
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்,
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்,
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு,
7) மெரினா கடற்கரை பார்க்கிங்,
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா,
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா
முதல் விரைவில் 100 மின்சார தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.






