சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன்
Published on

மதுரை,

தந்தை மகன் உயிரிழந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் என உத்தரவிடப்பட்டது.

இதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை முதல் வழக்கு விசாரணை துவங்க உள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 போலீசாருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 9 போலீசாரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com