குலசேகரன்பட்டினத்தில்ஆந்திர பெண் பக்தரின் 9 பவுன் நகைகள், மடிக்கணினி திருட்டு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த ஆந்திர மாநில பெண் பக்தரின் கார் கண்ணாடி உடைத்து 9 பவுன் நகைகள், மடிக்கணினியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினத்தில்ஆந்திர பெண் பக்தரின் 9 பவுன் நகைகள், மடிக்கணினி திருட்டு
Published on: 

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், டென்நேரு காங்கிபாடு பகுதியை சேர்ந்த ரவிசந்த் மகள் சாய் பிரியங்கா (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தசரா திருவிழா வில் முத்தாரம்மனை தரிசனம் செய்வதற்காக காண கடந்த 16-ந்தேதி காரில் புறப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதி யில் தங்கியுள்ளார். அன்று மாலையில் முத்தாரம்மனை தரிசனம் செய்வதற்காக குலசேகரன்பட்டி னத்திற்கு காரில் வந்துள்ளார். காரை கருங்காளி அம்மன் கோவில் தெரு அருகே உள்ள அங்கன்வாடி பகுதியில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கார் கண்ணாடியை உடைத்து...

பின்னர் கோவில் பகுதியில் தசரா குழுக்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வை யிட்ட அவர், இரவு 9 மணியளவில் மீண்டும் காருக்கு திரும்பி வந்துள்ளார். அப் போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் காருக்குள் வைத்திருந்த 2 தங்க சங்கிலிகள், 2ஜோடி வளையல்கள், 1 ஜோடி கம்மல் ஒன மொத்தமாக 9 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினி திருடப் பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சமாகும்.

அவர் காரை நிறுத்திவிட்டு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேக ரன்பட்டினம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து காரை உடைத்து நகைகள், மடிக் கணினியை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வரு கிறார். கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த பெண் பக்தரின் கார் கண்ணா டியை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com