பாம்பன் புதிய பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை

பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
பாம்பன் புதிய பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
Published on

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பாலத்தில் 3 முறை சரக்கு ரெயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூக்குப்பாலத்தை திறந்து மூடி பல்வேறு கட்ட சோதனைகளும் செய்யப்பட்டன.

இந்த நிலையில் , பாம்பன் புதிய பாலத்தில் இன்று மீண்டும் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 90 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. ரெயில் என்ஜினுடன் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

புதிய பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி வருகிற 13-ந் தேதி பெங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் மண்டபம் வருகிறார். தொடர்ந்து அவர் 2 நாட்கள் தங்கி புதிய ரெயில் பாலத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வுக்கு பின்னர் புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா தேதி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com