2 வந்தே பாரத் சரக்கு ரெயில்கள் தயாரிக்கும் பணி 90 சதவீதம் நிறைவு: இந்த மாதம் ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைப்பு

அதிவேக வந்தே பாரத் சரக்கு ரெயில் தயாரிக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டது.
2 வந்தே பாரத் சரக்கு ரெயில்கள் தயாரிக்கும் பணி 90 சதவீதம் நிறைவு: இந்த மாதம் ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைப்பு
Published on

சென்னை,

இந்திய ரெயில்வேயில் கூடுதல் சரக்குகளை கையாளுவது, பார்சல் ரெயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நிலக்கரி, உரம், சிமெண்டு, தானியங் கள், இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சரக்கு ரெயில்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் சரக்கு ரெயில் தயாரிக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டது.

இதையடுத்து, வந்தே பாரத் சரக்கு ரெயில் தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எப்.புக்கு ரெயில்வே வாரியம் வழங்கியது. கடந்த ஓராண்டாக புதிய சரக்கு ரெயில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு வந்தே பாரத் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதன்பின் கூடுதலாக மற்றொரு ரெயிலும் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற் போது, ஐ.சி.எப்.பில் 2 வந்தே பாரத் சரக்கு ரெயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சரக்கு ரெயில் 16 பெட்டிகள் கொண்டு, 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதில் உயர் மதிப்பு கொண்ட பொருட்கள் மற்றும் விரைந்து எடுத்து செல்ல வேண்டிய ரோஜா, மல்லிகை போன்ற பூ வகை களையும் கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. களையும் கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆன்லைன் வணிக நிறுவனங்களின் செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் சரக்கு ரெயில்கள் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியபோது, 'ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2 வந்தே பாரத் சரக்கு ரெயில்கள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்கள் தயாரிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்த மாதம் இறுதியில் முழுமையான பணிகள் முடிக்கப்பட்டு. ரெயில்வே வாரியத்திடம் சரக்கு ரெயில்கள் ஒப்படைக்கப்பட உள்ளது' என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com